மேற்கு வங்காளத்தில் பாஜகவினர் நடத்தும் முழு அடைப்பு போராட்டத்தின் போது பேருந்து தீவைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் மேற்கு வங்க மாநிலத்தின், வடக்கு தீனஜ்பூர் மாவட்டம் இஸ்லாம்பூர் பகுதியில் ஆசிரியர் பணி நியமனத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது 2 மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதனை கண்டித்து பாஜக சார்பில் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும் முழு அடைப்பையொட்டி பாஜகவினர் மற்றும் மாணவ அமைப்புகள் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல், ரயில் மறியல் என எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இப்போராட்டத்தின் போது சில இடங்களில் வன்முறையும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தீனஜ்பூர் பகுதியில் அரசுப்பேருந்து தீவைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Classic Right sidebar மேற்கு வங்காளம், West Bengal, முழு அடைப்பு போராட்டம், Bandh இந்தியாfrom Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2xEU86V
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment