Sunday, September 30, 2018

நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி தகாத உறவை கைவிட மறுத்த கணவன்.. மனைவி தற்கொலை

தகாத உறவு குற்றமல்ல என நீதிமன்றமே உத்தரவிட்டதால் தகாத உறவை கைவிடமாட்டேன் என கணவர் சவால் விடுத்ததை அடுத்து மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னை நெசப்பாக்கம், ராமதாஸ் தெருவைச் சேர்ந்த ஜான்பால் பிராங்ளின் என்பவர் அதே பகுதியில் உள்ள பூங்காவில் காவலராக வேலை பார்த்து வருகிறார், இவருக்கும் அங்கு துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்த பெண்ணுக்கும், தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து அவரது மனைவி புஷ்பலதா கேட்டதற்கு, நீதிமன்றமே தகாத உறவு குற்றமல்ல என உத்தரவிட்டுள்ளதால், என்னை ஒன்றும் செய்ய முடியாது, நான் அந்த பெண்ணுடன் தான் வாழ்வேன் என கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த புஷ்பலதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

 

Classic Right sidebar தகாத உறவு, தற்கொலை, Illegal Affair, SupreCourt, Suicide தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2NWtPDB
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment