Sunday, September 30, 2018

பிரிட்டன் பொருளாதாரத்தை கடக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை - பிரதமர் மோடி சூளுரை

பிரிட்டன் பொருளாதாரத்தை கடக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, எரி மற்றும் மின் சக்திக்கு குஜராத் தான் மையப்புள்ளி என்றும்  என்எல்ஜி-க்கு குஜராத் தான் நுழைவாயில் மற்றும் மைய இடம் எனவும் கூறினார்.  

இந்த 3வது என்எல்ஜி நாட்டிற்கு அற்பணிக்கப்படுகிறது என்றும் கிழக்கு கடற்பகுதிக்கு எரிவாயு அனுப்புவதற்கான முழு பொறுப்பை அனைவரும் ஏற்று அதனை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். 

நாடு சுதந்திரம் அடைந்த 60 ஆண்டுகளில் இதுவரை 13 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும்  இவற்றில் 10 கோடி இணைப்புகளை நாங்கள் ஆட்சிக்கு வந்த நான்காண்டுகளில் கொடுத்திருப்பதாகவும் மோடி கூறினார். மேலும், பிரிட்டன் பொருளாதாரத்தை முந்தும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

Classic Right sidebar பிரிட்டன், பொருளாதாரம், பிரதமர் மோடி, Britain, Narendra modi, Economy இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2Qnc1yi
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment