Saturday, September 29, 2018

இயற்கை பேரிடரிலிருந்து மீண்டுவந்த கேரளா... சுற்றுலாத்தலங்களைக் காண பயணிகளுக்கு அழைப்பு...

வரலாறு காணாத இயற்கை பேரிடரிலிருந்து கேரளா மீண்டு வந்துள்ளதால், சுற்றுலாத் தலங்களை காண்பதற்கு  அம்மாநில அரசு அழைப்பு விடுத்துள்ளது.

கேரள மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழையால் ஏராளமான பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வீடுகளை இழந்து தவித்து வந்தனர்.

மேலும் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இதையடுத்து உலகம் முழுவதிலும் இருந்து கேரளாவுக்கு நிவாரண பொருள்கள், மற்றும் நிவாரண உதவித் தொகை குவிந்தன.

இந்நிலையில் கேரள மாநிலம் வெள்ளத்தில் இருந்து மீண்டு வந்துள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து சுற்றுலா பயணிகள் வழக்கம் போல் கேரள மாநிலத்திற்கு சுற்றுலா வரலாம் என கேரள அரசு அழைப்பு விடுத்துள்ளது.

Classic Right sidebar கேரள மாநிலம், Kerala, Kerala Floods, Kerala Tourism, இயற்கை பேரிடர், Natural Disaster உலகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2xH6zPN
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment