Sunday, September 30, 2018

குன்றத்தூரில் திமுக பிரமுகர் ஓட, ஓட வெட்டிக் கொலை 

குன்றத்தூர் அருகே திமுக பிரமுகர் ஓட, ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே சிறுகளத்தூர், காந்தி தெருவைச் சேர்ந்தவர் கிரிராஜன், இவர் திமுகவில் உறுப்பினராக உள்ளார். மனைவியின் தம்பிக்கு பாபு என்பவரது மகளை காதல் திருமணம் செய்து வைத்த விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

சமாதானமாக செல்லலாம் என கிரிராஜனை அழைத்த பாபு, தான் மறைந்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டிக் கொன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

Classic Right sidebar திமுக பிரமுகர், வெட்டிக்கொலை, குன்றத்தூர், DMK Member, Murder தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2Rcg4ym
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment