Sunday, September 30, 2018

ATM-ல் பணம் எடுத்து தருவதாக பெண்ணிடம் மோசடி...

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஏ.டி.எம் இயந்திரத்தில்  பணம் எடுத்து தருவதாகக் கூறி  பெண்ணிடம் 22,000 வரை பணம் மோசடி செய்த  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில்  கீழரத வீதி பகுதியில் உள்ள  இந்தியன் வங்கி  ஏ.டி.எம் இயந்திரத்தில் அதேப் பகுதியைச்  சேர்ந்த தேவி என்பவர் பணம் எடுக்க வந்துள்ளார். அப்போது அந்த பெண்மணிக்கு உதவுவது போல், அப்பெண்மணி கேட்ட ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொடுத்துவிட்டு, அவரிடம் தான் வைத்திருந்த ஏ.டி.எம்  கார்டை மர்மநபர் மாற்றியுள்ளார். 

இதை அறியாத தேவி,  வீட்டிற்கு சென்று பார்த்த போது, தனது அலைபேசியில் 22,000 வரை பணம் எடுத்துள்ளதாக  குருஞ்செய்தி வந்துள்ளது. இதனை அடுத்து அந்த பெண் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  

பணம் எடுத்து தந்து உதவுவதுபோல், ஏடிஎம் கார்டை மாற்றி, நூதன பண மோசடியில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Classic Right sidebar விருதுநகர்,  Virudhunagar தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2P0yoce
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment