Sunday, September 30, 2018

சரணாலயத்திற்கு படையெடுத்த கோடைக்கரை பறவைகள்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஒருமாதத்திற்கு முன்பாகவே பறவைகள் வரத்தொடங்கியுள்ளது சுற்றுலாப் பயணிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை வடதுருவப் பகுதிகளில் நிலவும் கடும் குளிரைப் போக்குவதற்காக இங்கு பறவைகள் வந்தவண்ணம் உள்ளன. கொசு உள்ளான் முதல் 4 அடி உயரமுள்ள பூநாரை வரை 270 க்கும் மேற்பட்டவகைப் பறவைகளை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மும்பையைச் சேர்ந்த பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தினர் கோடியக்கரையில் பறவைகளைப் பிடித்து இறகுகள் மற்றும் மூக்கின் நீளம், அதனுடைய எடை, உயரம் ஆகியவற்றை அளவிட்டு ஆய்வு செய்துவருகின்றனர்.

 

Classic Right sidebar நாகைப்பட்டினம், கோடையக்கரை, பறவை தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2QlcyQZ
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment