Saturday, September 29, 2018

தொழில்துறையில் தொடர்ந்து பீடுநடை போட்டு முன்னேறும் தமிழகம் - அமைச்சர் எம்.சி.சம்பத் பெருமிதம்

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 23 மற்றும் 24ம் தேதிகளில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு பெரும் வெற்றியடையும் என தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில், 2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி ரூபாய் அளவில் முதலீடு பெறப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

 68 பெரும் தொழில் நிறுவனங்கள் ஏற்கெனவே பணிகளை தொடங்கியுள்ளதாகவும், இதன்மூலம் நேரடியாக ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 27 வேலை வாய்ப்பு மற்றும் பல லட்சம் மறைமுக வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.  

27 ஆயிரத்து 953 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அன்னிய முதலீடாகவும், குஜராத் மாநிலத்தில் இருந்து 20 ஆயிரம் கோடி ரூபாய் உள்நாட்டு முதலீடாவும் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழகம் தொழில்துறையில் தொடர்ந்து பீடுநடைபோடவும், வளர்ச்சிப் பாதையில் புதிய இலக்குகளை அடையவும், வரும் ஜனவரி மாதம் 23 மற்றும் 24ம் தேதிகளில் நடைபெறும் 2 வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு பெரும் வெற்றியடையும் என அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்துள்ளார்.

Classic Right sidebar எம்.சி. சம்பத், Minister MC Sampath, Tamil Nadu, Industrial Development, உலக முதலீட்டாளர்கள் மாநாடு, Investors Conference தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2xKEirC
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment