Saturday, September 29, 2018

சென்னையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவை திமுக புறக்கணிப்பு - ஸ்டாலின் விளக்கம்

அரசு விழா என்ற பெயரில் கட்சி அரசியலுக்காகவும், இலாப நோக்கத்துடனும் எம்.ஜி.ஆரின் பெயரைப் பயன்படுத்தும் விழாக்களில் தனக்கு உடன்பாடில்லை என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா அழைப்பிதழில், தனது பெயரை இடம்பெறச் செய்திருக்கும் அரசியல் பண்பாட்டை மதிப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

தன்னிடம் கலைஞர் - எம்.ஜி.ஆர் நட்பை நினைவூட்டும் தம்பிதுரை, அழைப்பிதழில் பெயர் இடம் பெறச் செய்திருந்த முதலமைச்சர் –துணை முதலமைச்சர் உள்ளிட்டோரும், 2016 ஜனவரியிலேயே முறைப்படி தொடங்கப்பட்டிருக்க வேண்டிய எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா குறித்து, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையாரிடம் நினைவூட்டியிருக்கலாம் என தெரிவித்துள்ளார். 

அரசு விழா என்ற பெயரில் கட்சி அரசியலுக்காகவும், இலாப நோக்கத்துடனும் எம்.ஜி.ஆரின் பெயரைப் பயன்படுத்தும் விழாக்களில் தனக்கு உடன்பாடில்லை என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டது கலைஞர் - எம்.ஜி.ஆர். நட்பு என்றும், அதனை அரசியலாக்காமல் எம்.ஜி.ஆரின் புகழ் பாடும் விழாவாக அவரது நூற்றாண்டு நிறைவு விழாவை கொண்டாட வேண்டும் என  தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Classic Right sidebar DMK, திமுக, மு.க.ஸ்டாலின், MK Stalin, ADMK, MGR 100, Tamilnadu, தமிழக அரசு, அதிமுக, எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, முதலமைச்சர் பழனிசாமி, TN CM Palaniswami அரசியல் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2QmiRUH
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment