Sunday, September 30, 2018

தூத்துக்குடியில் கப்பலில் விஷ வாயு தாக்கி 2 பேர் பலி

தூத்துக்குடிக்கு வந்துள்ள பார்சி எனப்படும் சிறியவகை கப்பலை சுத்தப்படும் பணியின் போது விஷ வாயு தாக்கி 2 ஊழியர்கள் உயிரிழப்பு.

மாலத்தீவிலிருந்து இருந்து கற்களை ஏற்றிச் செல்வதற்காக பார்சி எனப்படும் சிறியவகை கப்பல் தூத்துக்குடி பழைய துறைமுகம் வந்துள்ளது. 

இந்த பார்சி கப்பலை வரும் 3 ஆம் தேதி ஆய்வுக்கு உட்படுத்த இருப்பதால் அதில் பணிபுரியும் ஊழியர்களைக் கொண்டு சுத்தப்படுத்தும் பணி நடந்து கொண்டிருக்கும் போது பார்சியின் உள் அறைக்குள் இறங்கி சுத்தம் செய்யும் போது ஜாம்டேவிட் ராஜா, சக்திவேல் ஆகியோருக்கு விஷ வாயு தாக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து தூத்துக்குடி மத்தியபாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Classic Right sidebar தூத்துக்குடி, பார்சி, விஷ வாயு, Thoothukudi தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2Ouryz3
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment