Sunday, September 30, 2018

திருப்பூரில் பல இடங்களில் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் கைது

திருப்பூரில் பல இடங்களில் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

திருப்பூரில் பல இடங்களில் கொள்ளை நடைபெறுவதாக பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். 

இந்நிலையில், திருப்பூர் சிடிசி சாலையில் சந்தேகத்திற்க்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் 3 பேரும் மக்களின் கவனத்தை திசை திருப்பி கடந்த 8 மாதங்களாக கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. 

உடனடியாக 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 30 சவரன் நகை மற்றும் 1 லட்சத்தி 68 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

 

Classic Right sidebar Thiruppur, Theft, திருப்பூர், கொள்ளை தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2xQ29pJ
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment