Saturday, September 29, 2018

“என்னை கவர்ந்து இழுத்த இயக்குநர்” - தனுஷை புகழ்ந்து தள்ளும் அதிதி

வடசென்னை ரிலீஸ், என்னை நோக்கி பாயும் தோட்டா, மாரி-2 ஷூட்டிங் என படு பிசியாக இருக்கிறார் நடிகர் தனுஷ். இதற்கிடையில், பவர் பாண்டி படத்தின் வெற்றிக்கு பிறகு இவரது இயக்கத்தில் உருவாகி வருகிறது பெயர் வைக்கப்படாத திரைப்படம். இதில் நாகார்ஜுனா, எஸ்.ஜே. சூர்யா, ஸ்ரீகாந்த், அதிதி ராவ் என பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். 

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம் படத்துக்கு பிறகு அதிதி ராவ் நடிக்கும் அடுத்த தமிழ் படம் இதுவாகும். இது குறித்து அவர் கூறுகையில்,

தனுஷின் டிரைக்‌ஷன் ஸ்டைல் புதுமையாகவும், எளிதாவும் உள்ளது. அவருடன் பணிபுரிவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தனுஷின் இயக்குநர் முகம் என்னை கவர்ந்து இழுத்துவிட்டது என புகழாரம் சூட்டியுள்ளார் அதிதி. ஏற்கெனவே, தனுஷுடன் நடிப்பதற்கான வாய்ப்பு கிட்டியும் அது தேதி பற்றாக்குறையால் கைகூடாமல் போய்விட்டதும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

Classic Right sidebar Aditi Rao Hydari, dhanush, Power Pandi, Tamil Cinema சினிமா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2OnrQaO
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment