Saturday, September 29, 2018

சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியவர்களே சட்டத்தை மீறினால் என்னவாகும்? - அன்புமணி ராமதாஸ் அறிக்கை

சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியவர்களே சட்டத்தை மீறினால் என்னவாகும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியவர்களே சட்டத்தை மீறினால் என்னவாகும் என்பதற்கு சென்னையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் நடத்தப்படும் அத்துமீறல்கள் தான் உதாரணம் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

மேலும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை அமைத்துள்ள ஆளுங்கட்சியினர் மீது புகார் கொடுக்கப்பட்டும் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழாவும், தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டதன் பொன்விழாவும் சென்னையில் நாளை நடைபெறவுள்ளன.

அரசு சார்பில் இந்த விழா நடத்தப்பட்டாலும், இது முழுக்க முழுக்க அதிமுக விழாவாகவே நடத்தப்படுகிறது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெறும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ திடலை ஒட்டிய அண்ணா சாலையின் பகுதியில் மட்டும் 138 பதாகைகள் அதிமுகவினர் சட்டவிரோதமாக அமைத்துள்ளனர்.

இந்த பதாகைகள் அனைத்தும்  நடைபாதைகளையும், சில மீட்டர் அகலத்துக்கு சாலையையும் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் சாலைகளில் நடந்து செல்வதால் அவர்கள் விபத்துக்குள்ளாகும் ஆபத்து ஏற்பட்டிருப்பது மட்டுமின்றி, வாகனப் போக்குவரத்தின் வேகம் குறைந்து போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

Classic Right sidebar Chennai, PMK, Anbumani Ramadoss, MGR100, அன்புமணி ராமதாஸ், பாமக, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2QfYsAo
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment