Saturday, September 29, 2018

83 நாட்களுக்குப் பின்னர் ஒகேனக்கல் அருவியில் நீராட அனுமதி

ஒகேனக்கல்லில் 83 நாட்களுக்குப் பின்னர், அருவிகளில் நீராட சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

தமிழகத்தின் மிகச் சிறந்த சுற்றுலா தளமான ஒகேனக்கல் தென்னிந்தியாவில் நயகரா நீர்வீழ்ச்சி என்று பாராட்டும் அளவிற்கு சுற்றுலா பயணிகளால் கவரப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் கேரளா மற்றும் கர்னாடகா பகுதிகளில் பலத்த மழை பெய்ததன் காரணமாக, ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தென்மேற்கு பருவ மழை காரணமாக, 10 ஆயிரம் கன அடி முதல் 2 லட்சத்து 25 ஆயிரம் கன அடி வரை நீர்வரத்து இருந்த காரணத்தால் மாவட்ட நிர்வாகம் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடர்ந்து தடை விதித்திருந்தது.

தற்போது நீர்வரத்து குறைந்ததையடுத்து பராமரிப்புப் பணிகள் நடைபெற்றன. இந்நிலையில், 83 நாட்களுக்குப் பின்னர் இன்று அதிகாலை முதல் சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. பள்ளி காலாண்டு தேர்வு விடுமுறை என்பதால் இன்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.

Classic Right sidebar தமிழகம், Tamilnadu, ஒகேனக்கல், Hoganekkal, வெள்ளப்பெருக்கு தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2R7765L
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment