நாட்டறம்பள்ளி அருகே கரடி கடித்து 4 வயது குழந்தை படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த கொத்தூர் ஊராட்சி ஆந்திரா மற்றும் தமிழக எல்லை ஒட்டி வனப்பகுதியில் உள்ளது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து தாய் கரடி ஒன்றும் அதன் குட்டி ஒன்றும் திடீரென்று ஊர் பகுதிக்கு வந்துள்ளது.
இதனை கண்ட அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கரடிகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது தாய் கரடி அங்கிருந்து தப்பி அருகில் உள்ள வனப்பகுதிக்கு ஒடி விட்டது.
இதனையடுத்து குட்டிகரடியை விரட்டும் போது குமார் என்பவரின் மகள் கயல்விழி என்ற குழந்தையை கடித்தது. இதனால் படுகாயமடைந்த குழந்தையை உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Classic Right sidebar வேலூர், கரடி, Vellore, Bear தமிழகம்
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2RbbVLa
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment