Saturday, September 29, 2018

இந்தோனேசியா நிலநடுக்கத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 400 ஐ தாண்டியது

இந்தோனேஷியாவில்  ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 400 ஐ தாண்டியுள்ளது.

இந்தோனேஷியாவின் சுலேவேசி தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சுலேவேசியின் டோங்கலாவில் இருந்து வடகிழக்காக பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழம் மையம் கொண்டு 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.  

நிலநடுக்கத்தை அடுத்து பல இடங்களில் சுனாமியும் ஏற்பட்டது. பாலு நகரில் 5 அடி உயரத்திற்கு எழும்பிய சுனாமி அலைகள் சுமார் 35,0000 மக்கள் வசிக்கும் பகுதியை தாக்கியதால் அந்நகரமே பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி இதுவரை 400 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பேரழிவில் சிக்கி பலர் படுகாயமடைந்துள்ளதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Classic Right sidebar இந்தோனேஷியா, indonesia, Tsunami, Earthquake, Natural Disaster, நிலநடுக்கம், சுனாமி உலகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2DI26BF
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment