Saturday, September 29, 2018

பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலா வருகின்றனர் - சுஷ்மாசுவராஜ்

பயங்கரவாதிகளை  சுதந்திரமாக நடமாட விடும் பாகிஸ்தானை உலகநாடுகள் தனிமைப்படுத்த வேண்டும் என்று  ஐ.நா.சபை பொதுசபைக்கூட்டத்தில் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜ் வலியுறுத்தினார். 

அமெரிக்காவின்  நியூயார்க்கில் உள்ள ஐ.நா. பொதுச்சபையின் 73-வது கூட்டம்  அதன் தலைமையகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய  மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் , அமெரிக்காவின் நெருங்கிய நட்புநாடாக இருந்த பாகிஸ்தான் ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்தது என்று குற்றஞ்சாட்டினார்.

மும்பை தாக்குதலுக்கு காரணமாக ஹபீஸ் சையத் உள்ளிட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலா வருகின்றனர் என்று தெரிவித்த அவர், பயங்கரவாத ஒழிப்பில் பாகிஸ்தான் இரட்டை வேடம் போடுகிறது என்றார்.

பாகிஸ்தான் பயங்கரவாதத்தை நிறுத்தவில்லை என்பதால், அந்த நாட்டுடன் பேச்சுக்கான சூழல் இப்போது இல்லை என்று இந்தியாவின் நிலைப்பாட்டை சுஷ்மா சுவராஜ் தெளிவுபடுத்தினார்.

Classic Right sidebar சுஷ்மா சுவராஜ், Sushma Swaraj, UN Assembly, இந்திய வெளியுறவுத் துறை, அமேரிக்கா, United States உலகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2xNfdfv
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment