Saturday, September 29, 2018

சைபர் குற்றங்களை எதிர்கொள்ள மாணவர்கள் தயாராகவேண்டும் - நிர்மலா சீத்தாராமன்

தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் சைபர் குற்றங்களை எதிர்கொள்ள மாணவர்கள் தயாராகவேண்டும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.

காட்பாடியில் அமைந்துள்ள பல்கலைகழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு 54 மாணவ மாணவிகளுக்கு தங்க பதங்களை வழங்கியும், 6,277 மாணவ மாணவியர்க்கு பட்டங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், சைபர் குற்றங்கள் தேச பாதுகாப்பிற்க்கு மட்டுமல்லாமல் தனி மனித பாதுகாப்புக்கும் அச்சுருத்தலாக உள்ளதாக குறிப்பிட்டார்.

மாணவர்கள் தங்களது விஞ்ஞான அறிவை பயன்படுத்தி சைபர் குற்றங்களால் வரும் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான அறிவை வளர்த்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

Classic Right sidebar தேசப் பாதுகாப்பு, National Safety, Cyber Crime, சைபர் குற்றங்கள், நிர்மலா சீத்தாராமன், Nirmala sitharaman இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2N9cL83
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment