Saturday, September 29, 2018

பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டாவது சர்ஜிகல் ஸ்டைரக் - ராஜ் நாத் சிங் சூசக தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டாவது 'சர்ஜிகல் ஸ்டைரக் ' நடத்தப்பட்டது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் சூசக தகவல் வெளியிட்டு உள்ளார்.

எல்லை பாதுகாப்புப் படை வீரர் நரேந்திர சிங் கடந்த 18ம் தேதி தோட்டத்திற்கு பயிர்களை கவனிக்க சென்றிருந்தபோது, அவரை கடத்திச் சென்ற பாகிஸ்தான் ராணுவத்தினர் சித்ரவதை செய்து படுகொலை செய்தனர். இச்சம்பவம் ராணுவத்தினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

உரிய நேரத்தில் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி தரப்படும் என்று தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜோத்பூரில்  இராணுவ கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் முதல் தோட்டாவை சுடவேண்டாம் என்று இந்திய ராணுவ வீரர்களைக் கேட்டுக் கொண்டிருப்பதாகவும்  ஆனால், எதிரிகள் ஒரு தோட்டாவை சுட்டால் கணக்கில்லாத தோட்டாக்களை எதிரிகள் மீது சுடலாம் என்றும் தாம் தெரிவித்துள்ளதாக ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

Classic Right sidebar எல்லை பாதுகாப்புப் படை, Border Security Force, Indian Army, Rajnath Singh, Surgical Strike, Bipin Rawat, பிபின் ராவத், சர்ஜிகல் ஸ்டைரக், பாகிஸ்தான், ராஜ் நாத் சிங் இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2N7rsIR
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment