சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது டக்வொர்த் லீவிஸ் முறையில் திருத்தங்களை செய்துள்ளது. அதன்படி, புதிய டக்வொர்த் லீவிஸ் முறை நாளை முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை போன்ற காலநிலைகளால் போட்டி பாதிக்கப்படும்போது டக்வொர்த் லீவிஸ் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த முறையில், 2014-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட 3வது வெர்ஷனில் 2-வது முறையாக தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த நான்கு ஆண்டுகளில் விளையாடப்பட்ட ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஒவ்வொரு பந்திலும் எடுக்கப்படும் ரன்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். கிட்டத்தட்ட 700 ஒருநாள் மற்றும் 428 டி20 போட்டிகள் இந்த வரையரைக்குள் வரும். ஒருநாள் போட்டிகளில் கடைசி 20 ஓவர்கள் மற்றும் டி20 போட்டிகள் ஆகிய இரண்டுக்குமே பொருந்தும் வகையில் டக்வொர்த் லீவிஸ் முறை திருத்தப்பட்டுள்ளது.
ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் என இரண்டுக்கும் இந்த மாற்றம் பொருந்தும். இந்த திருத்தம் நாளை முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.
Classic Right sidebar சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், International Cricket Council, ICC, டக்வொர்த் லீவிஸ், Duckworth–Lewis method விளையாட்டுfrom Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2On64DW
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment