Sunday, September 30, 2018

U 19 ஆசிய கோப்பை கிரிக்கெட்: அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திய இந்திய அணி

19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஐக்கிய அரபு எமீரகத்தை வீழ்த்திய இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்தியது. 

வங்கதேசத்தில் 19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற்று வருகிறது. 8அணிகள் பங்கேற்றுள்ள இதில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, 2வது போட்டியில் ஐக்கிய அரபு எமீரத்துடன் மோதியது. 

முதலில் ஆடிய இந்தியா, அனுஜ் ரவட், தேவ்டுட் படிக்கல் சதத்தால் 354 ரன்கள் குவித்தது. பின், விளையாடிய ஐக்கிய அரபு எமீரக வீரர்கள் சொற்ப ரன்னில் விக்கெட் இழந்து 127ரன்னுக்கு ஆல் அவுட் ஆகினர். முடிவில், 227ரன்களுக்கு அபார வெற்றி பெற்ற இந்தியா, அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்தியது.

 

Classic Right sidebar U18, Asian Cup, India Vs UAE விளையாட்டு 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2DIQfTV
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment