Saturday, September 29, 2018

புரட்டாசி சனிக்கிழமை யொட்டி, திருப்பதியில் கட்டுக்கடங்கா கூட்டம்

புரட்டாசி சனிக்கிழமை யொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்திற்காக பக்தர்கள் குவிந்ததால், இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உருவானது.

உலக பிரசித்திபெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில், 2-வது புராட்டாசி சனிக்கிழமையான இன்று, சுவாமி தரிசனத்திற்காக பக்தர்கள் குவிந்தனர். இதனால் திருப்பதி மலையில் காணும் இடமெல்லாம் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது.

இலவச தரிசனத்திற்காக வைகுண்டம் காத்திருப்பு மண்டபம் முழுவதும் பக்தர்கள் நிறைந்திருந்தனர். இடம் கிடைக்காத பக்தர்கள், சுவாமியை தரிசிப்பதற்காக சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதன்காரணமாக, சுமார் 24 மணி நேரம் காத்திருந்தால் மட்டுமே ஏழுமலையானை இலவசமாக தரிசிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இதனால், வெளிமாநிலங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள், மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.

Classic Right sidebar திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில், Tirumala Tirupati, Andhra pradesh, புரட்டாசி சனிக்கிழமை, Purattasi Saturday இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2Ra2QlR
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment