Sunday, September 30, 2018

சாலையில் கிடந்த பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த 5 வயது சிறுவன்

உசிலம்பட்டியில் சாலையில் தவறவிட்ட  10ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து,  5-வயது சிறுவன் போலீசாரிடம் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டம், பெரியபாலார்பட்டியைச் சேர்ந்த பரமன், கடந்த இரு தினங்களுக்கு முன்பு உசிலம்பட்டி சந்தன மாரியம்மன் கோயில் அருகே 10 ஆயிரம் ரூபாயை வைத்த பணப்பையை தவறவிட்டுள்ளார். 

அப்போது அவ்வழியாக சென்ற  5 வயது சிறுவன் அபிஷேக், அதை மீட்டு,தனது பெற்றோர் மூலம் காவல்நிலையத்தில் ஒப்படைக்கமுயற்சிஎடுத்துள்ளார். பின் உடனே தனதுமகன் அபிஷேக்குடன்,உசிலம்பட்டி நகர் காவல்நிலையத்துக்குச் சென்ற அபிஷேக்கின் தந்தை செல்வம், காவல்நிலையத்தில் பணப்பையை ஒப்படைத்தார். 

பின்னர், பணப்பையில் இருந்த தொலைபேசி எண்ணைவைத்து,நேரில் வரவழைக்கப்பட்டு பரமனிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது. சிறுவயதிலேயே நேர்மையுடன் செயலை, உசிலம்பட்டி காவல்நிலையத்தினர் வெகுவாக பாராட்டினார்.

 

Classic Right sidebar உசிலம்பட்டி, Usilampatti தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2y4EBN1
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment