Wednesday, September 26, 2018

'இந்தியன் 2' படத்தை தொடர்ந்து 'தேவர்மகன் 2' படத்திற்கு தயாராகும் கமல்ஹாசன்

இந்தியன் 2’ வை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் ‘தேவர் மகன்’ இரண்டாம் பாகத்துக்கும் தயாராவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் இப்போது பார்ட் 2 படங்களின் சீசன்! சூர்யாவின் சிங்கம் படத்தின் மூன்று பாகங்கள் வெளிவந்துள்ளன. கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகமும் வந்தது. ரஜினியின் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 படம் தயாராகி வருகிறது.

விக்ரமின் சாமி படத்தின் இரண்டாம் பாகமான சாமி ஸ்கொயர் கடந்த வாரம் திரைக்கு வந்தது. விஷால் சண்டக்கோழி இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். அரவிந்த்சாமி நடிப்பில் சதுரங்க வேட்டை இரண்டாம் பாகமும் தயாராகி உள்ளது. 

ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கத் தயாராகி வருக்கிறார் கமலஹாசன். இந்தநிலையில் கமல்ஹாசன், ‘தேவர் மகன்’ இரண்டாம் பாகத்துக்கும் தயாராவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1992–ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய தேவர் மகன் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கதையின் மைய கதாப்பாத்திரம் ஏற்று நடிக்க, அவரின் மகனாக நடித்திருந்தார் கமல்ஹாசன். இதில் ரேவதியும், கவுதமியும் நாயகிகளாக நடித்திருந்தனர். வில்லத்தனமான வேடத்தில் வந்து வெளுத்து வாங்கினார் நடிகர் நாசர்.

இளையராஜாவின் இசையில்‘போற்றி பாடடி பெண்ணே...’, ‘சாந்துப் பொட்டு சந்தனப் பொட்டு..’,  ‘இஞ்சி இடுப்பழகி..’ போன்ற இனிய பாடல்களும் இடம்பெற்றன. படம் சூப்பர் ஹிட் ஆனதோடு, இந்தப் படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது.

தமிழை தொடர்ந்து இந்தி, கன்னடம் மொழிகளிலும் வெளியாகி அங்கேயும் ஹிட் அடித்தது. இவ்வளவு சிறப்புக்களையும் கொண்ட ‘தேவர் மகன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முடிவுக்கு கமல்ஹாசன் வந்திருப்பதாகவும், ‘இந்தியன் 2’,  ‘தேவர் மகன் 2’ இரண்டு படங்களையும் தேர்தலுக்கு முன்பு திரைக்கு கொண்டு வரும் தீவிரத்தில் அவர் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.   

Classic Right sidebar கமல்ஹாசன், இந்தியன் 2, தேவர்மகன் 2, சினிமா, kamalhaasan, Indian 2, Devarmagan 2 சினிமா கமல்ஹாசன், இந்தியன் 2, தேவர்மகன் 2, சினிமா, Kamalhaasan, Indian 2, Devarmagan 2 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2Ihk10R
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment