Sunday, September 30, 2018

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்: தீபிகா குமாரி வெண்கலம் வென்று அசத்தல் !

துருக்கியில் நடைபெற்ற உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

துருக்கியில் Samsun நகரில் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இதன் மகளிர் ரிசர்வ்  தனிநபர் பிரிவு வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில், இந்தியாவின் தீபிகா குமாரி, ஜெர்மனியின் லிசா உன்ரு (Lisa Unruh) உடன் மோதினார். 5 செட்களின் முடிவில் இருவரும் 5க்கு5 என்ற புள்ளிக்கணக்கில் சமநிலை வகித்தனர். 

முடிவில், தீபிகா ஷூட் அவுட் முறையில் தீபிகா வெற்றி பெற்று வெண்கலப்பதக்கம் வென்றார். இதேபோல், ஆடவர் தனிநபர் பிரிவில் இந்திய வீரர் அபிஷேக் வெர்மா, தென்கொரிய வீரர் கிம் ஜாங்கோவை வீழ்த்தி வெண்கலம் வென்றார். கலப்பு அணி பிரிவில் அபிஷேக் வெர்மா, சுரேகா அடங்கிய இந்திய அணி துருக்கியை வீழ்த்தி வெள்ளிப்பதக்கம் வென்றது.

Classic Right sidebar துருக்கி, உலக வில்வித்தை சாம்பியன்ஷிப், தீபிகா குமாரி, வெண்கலப்பதக்கம், வில்வித்தை சாம்பியன்ஷிப் விளையாட்டு 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2OYfGCd
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment