Sunday, September 30, 2018

MGR நூற்றாண்டு விழாவுக்கு அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட திட்டமிடப்பட்டு,  இதுவரை 31 மாவட்டங்களில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிலையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50-ம் ஆண்டு பொன்விழா மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது

இந்நிலையில், எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார். 

அதில் சட்ட விரோதமாக பேனர்கள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி மணிக்குமார் தலைமையிலான அமர்வில் அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. 

அப்போது,  அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற உத்தரவிட்டது. மேலும், பேனர் வைக்க அனுமதி வழங்கும் போது  விதிக்கப்பட்ட விதிகள், நீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்றும் கூறியது.

மேலும், இது குறித்த அறிக்கையை அக்டோபர் 8-ஆம் தேதி தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சி மற்றும் காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது

Classic Right sidebar ADMK, MGR 100, Tamilnadu, தமிழக அரசு, அதிமுக, எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, முதலமைச்சர் பழனிசாமி, TN CM Palaniswami, Madras High Court, சென்னை உயர்நீதிமன்றம் தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2xOCyNP
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment