டீசரை தொடர்ந்து ட்ரைலர் ரிலீஸ் குறித்த தகவலை வெளியிட்ட 2.0 படக்குழு. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகியிருந்த படம் 'எந்திரன்'. ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் இணைந்து நடித்திருந்த இந்த படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றது.
ஒரு எந்திரத்திற்கு காதல் வந்தால் என்ன நடக்கும் என்பதை மையமாக வைத்து உருவாகியிருந்த எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக தற்போது உருவாகி வருகிறது '2.0'. 3D தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடித்துள்ளார். ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர், 3 மேக்கிங் வீடியோக்கள் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. தற்போது இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படத்தை நவம்பர் 29-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
தற்போது, படத்தின் டிரெய்லரை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கும் இந்த டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ‘2.0’ படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ளவுள்ளனர். டீஸர் ஏற்படுத்திய அதிர்வலைகளே இன்னும் ஓயவில்லை அதற்குள் அடுத்த அப்டேட்டை சொல்லி கோலிவுட் ரசிகர்களை படக்குழு கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.
Classic Right sidebar 2POint0, Rajinikanth, ரஜினி, சினிமா 100
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2NRCcA1
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment