Saturday, September 29, 2018

இந்தோனேசியாவில் சுனாமியால் நிமிடத்திற்கு நிமிடம் உயரும் பலி எண்ணிக்கை

இந்தோனேசியாவை புரட்டிப்போட்டுள்ள சுனாமியில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 384-ஆக உயர்ந்துள்ளது. 

இந்தோனேசியாவின் மத்திய சுலவேசி மற்றும் மேற்கு சுலவேசி பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.5  ரிக்டா் அளவாக பதிவான இந்நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டடங்கள் இடிந்து விழுந்தன.

இதனைத்தொடா்ந்து, சுனாமியும் தாக்கியதில் 9 கிராமங்கள் நீரில் மூழ்கின. நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் 48ஆக இருந்த பலி எண்ணிக்கை தற்போது 384ஐக் கடந்துள்ளதாக இந்தோனேசிய பேரிடர் மீட்புக்குழு அறிவித்துள்ளது.

இந்த பலி எண்ணிக்கை 500ஆக உயர வாய்ப்பிருப்பதாகவும் மீட்புக்குழுவினர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர். கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் சிக்கி  500 பேர் வரை உயிரிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Classic Right sidebar இந்தோனேசியா, சுனாமி, நிலநடுக்கம், Earthquake, Tsunami, indonesia, இந்தோனேசிய பேரிடர் மீட்புக்குழு உலகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2y023eA
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment