Saturday, September 29, 2018

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கூரை டைல்ஸ் விழுந்து பெண்படுகாயம்

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கூரையில் பதிக்கப்பட்ட டைல்ஸ் பயணியின் தலையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

சென்னை அமைந்தகரை அருகே பாரதிநகரைச் சேர்ந்த விஜயா என்ற பெண்மணி, எழும்பூரில் பணி செய்துவருகிறார்.இந்நிலையில் இன்று பணிக்குச் செல்வதற்காக, ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த விஜயாவின் தலையில், மேற்கூரையில் பதிக்கப்பட்ட டைல்ஸ் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதையடுத்து உடனடியாக, மீட்கப்பட்ட அப்பெண்மணி அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சென்னை அமைந்தகரை காவல்நிலைய காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

முன்னதாக, கடந்த இரு வாரத்திற்கு முன்பு எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்திலும் இதேபோல் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.

Classic Right sidebar சென்னை மெட்ரோ ரயில் நிலையம், சென்னை மெட்ரோ, Chennai, Chennai Metro, ஷெனாய் நகர், Shenoy Nagar தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2IusDS1
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment