Sunday, September 30, 2018

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்காதது ஏன்?

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் நூற்றாண்டு நிறைவு விழா தமிழக அரசு சார்பில் சென்னையில் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

அதிமுக நிறுவனரும்,முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு முதல் தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா நடைபெற்ற போது, நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அந்த வகையில் எம்ஜிஆரின் நூற்றாண்டு நிறைவு விழா தமிழக அரசு சார்பில் சென்னையில் இன்று மாலை 4 மணிக்கு கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. 

இந்த விழாவின் அழைப்பிதழில் திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி மற்றும் டிடிவி தினகரன் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. அழைப்பிதழின் கடைசியில் மாவட்ட செயலாளர்களுக்கு கீழே டிடிவியின் பெயர் போடப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் உண்மையிலேயே தான் கலந்து கொள்ள வேண்டும் என நினைத்திருந்தால் முன் கூட்டியே தேதி வாங்கி இருக்க வேண்டும் என அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் கூறியுள்ளார்.

அருந்ததியினர் கூட்டமைப்பின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ஈரோடு செல்வதாகவும் தினகரன் தெரிவித்தார்.

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா அழைப்பிதழில் தனது பெயர் சேர்த்திருப்பது ஒரு வழக்கத்திற்காகத்தான் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

Classic Right sidebar ADMK, MGR 100, Tamilnadu, தமிழக அரசு, அதிமுக, எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, முதலமைச்சர் பழனிசாமி, TN CM Palaniswami, அமமுக, AMMK, TTV Dhinakaran, டிடிவி தினகரன் அரசியல் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2R91hEF
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment