Saturday, September 29, 2018

ஓட்டுநர் உரிமத்திற்கான கட்டணத்தை அக்-1ம் தேதி முதல் இணையதளத்தில் செலுத்தும் வசதி

ஓட்டுநர் உரிமம் தொடர்பான அனைத்துப் பணிகளுக்கும் கட்டணங்களை இணையதளம் மூலம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு முதல் வாகனங்களுக்கு பதிவுக் கட்டணம் மற்றும் வரி ஆகியவை இணையதளம் மூலம் செலுத்தும் வசதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், வரும் ஒன்றாம் தேதி முதல் ஓட்டுநர் உரிமம் தொடர்பான அனைத்து பணிகளுக்கும் கட்டணங்களை இணைதளம் மூலம் செலுத்தும் வசதியை போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதன்மமூலம், பழகுநர் உரிமம், நிரந்தர ஓட்டுநர் உரிமம், முகவரி மாற்றம் நகல் ஓட்டுநர் உரிமம் பெறுதல் போன்ற அனைத்துப் பணிகளுக்கும் இணையதளம் மூலம் கட்டணங்களை செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Classic Right sidebar ஓட்டுநர் உரிமம், Driving License, India, இந்தியா, Online Payment இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2QhyInc
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment