Wednesday, September 26, 2018

வளர்ச்சித் திட்டங்களில் தமிழகம் முதன்மை மாநிலமாக தேர்வு

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வளர்ச்சித் திட்டங்களில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் தேர்வு செய்யப்பட்டதற்கான விருதை அமைச்சர் வேலுமணி பெற்றுக்கொண்டார்.

தில்லியில் ஆறாம் ஆண்டு எகனாமிக் டைம்ஸ் ஊரக வளர்ச்சி வியூக மாநாடு 2018 புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதில் பல்வேறு நிறுவனங்களுக்கு விருதை தமிழக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார். நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறையில் சிறந்த வகையில் பங்காற்றிமைக்காக தமிழக அரசைப் பாராட்டி விருது வழங்கப்பட்டது.

டெல்லியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஊரகப் பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டங்களை திறம்பட செயல்படுத்தியமைக்கான விருதை,  தமிழ்நாடு சார்பில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், உள்ளாட்சித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வறுமை ஒழிப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களில் இந்திய அளவில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இவ்வாறு கூறினார்.

Classic Right sidebar டெல்லி, Delhi, SP Velumani, Tamilnadu, Rural Development, Economic Times தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2N9LQJq
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment