பாலிவுட் சினிமா உலகின் உச்ச நட்சத்திரங்களான அமிதாப் பச்சனும், அமீர் கானும் முதன்முறையாக இணைந்து “தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்” என்ற படத்தில் நடித்துள்ளனர். இதனை பிரபல தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இந்த படத்தை இயக்கியுள்ளார்.
மேலும், இந்த படத்தில் கத்ரினா கைஃப், பாத்திமா சனா ஷேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு என மும்மொழிகளிலும் வெளிவர உள்ளது.
“தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்” படம் வருகிற நவம்பர் 8ம் தேதி திரைக்கு வர உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், படத்திற்கான புரோமோஷன் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக நடிகர்கள் அமீர்கானும், அமிதாப் பச்சனும் இணைந்து தமிழிலும் தெலுங்கிலும் பேசி விளம்பரம் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
Classic Right sidebar Thugs Of Hindosthan, amitabhbachchan, bollywood, amir khan சினிமாfrom Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2QbyoGD
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment