Wednesday, September 26, 2018

நாமக்கல் அருகே மனைவி கண் முன்னே கணவர் வெட்டிக் படுகொலை

நாமக்கல் அருகே மனைவி கண் முன்னே கணவர் வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேந்தமங்கலத்தை அடுத்த துத்திக்குளம் பகுதியைச் சேரந்தவர் மாதேஸ்வரன். கார் மெக்கானிக்கான இவர், நாமக்கல்லில் பட்டறை வைத்துள்ளார். நேற்றிரவு பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தை அணைத்துவிட்டு தனது மனைவியுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

துத்திக்குளம் மாரியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென மாதேஸ்வரனை வழிமறித்த அவரை 2 பேர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.  

தகவலறிந்து சென்ற சேந்தமங்கலம் காவல்துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து காவல்துறை நடத்திய விசராணையில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக அக்கா மகன்களே வெட்டிக்கொலை செய்தது தெரியவந்துள்ளது.

தலைமறைவான இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Classic Right sidebar Namakkal, Murder, நாமக்கல், படுகொலை, சேந்தமங்கலம் தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2zygisO
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment