லோக்பால் அமைப்புக்கு தலைவர் உள்பட உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
பிரதமர் உள்ளிட்டவர்களின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் விசாரிப்பதற்கு லோக்பால் என்ற அதிகாரமிக்க அமைப்பை உருவாக்குவதற்கான மசோதா கடந்த 2013-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
லோக்பால் அமைப்பின் தலைவர், உறுப்பினர் யார் என்பதை பரிந்துரைக்க தேடுதல் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் தலைவர் அருந்ததி பட்டாச்சாரியா, பிரச்சார் பாரதி முன்னாள் தலைவர் சூரிய பிரகாஷ், இஸ்ரோ முன்னாள் தலைவர் கிரண் குமார் உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
இந்த குழு லோக்பால் தலைவர், உறுப்பினர் பதவிகளுக்கு தகுதி வாய்ந்த நபர்களை தேடி கண்டுபிடித்து அரசுக்கு பரிந்துரை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Classic Right sidebar central government, LokpalCommittee, லோக்பால், மத்திய அரசு, இந்தியாfrom Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2N70xN5
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment