Thursday, September 27, 2018

ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் அனுமதிக்கப்படுவார்களா? உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் நுழைய அனுமதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில்  உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பளிக்க உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது ஆண்களும்  அனுமதிக்கப்படும் நிலையில், பெண்களில் 10 வயது முதல் 50 வயதுக்குட்டப்பட்டவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பு உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்தனர். 

கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதிமுதல் 8-நாட்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.எப் நாரிமன், ஏஎம். கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. 

இந்த வழக்கில் தங்கள் பதிலைத் தெரிவித்த கேரள அரசு, பருவம் எய்திய பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கிறோம் என்று கடந்த ஜூலை 18-ம் தேதி மனுத்தாக்கல் செய்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.

 

Classic Right sidebar உச்சநீதிமன்றம், சபரி மலை, ஐயப்பன் கோயில், பெண்கள், SupremeCourt, SabariMala, Ayyappan Temple,   இந்தியா சபரி மலை, மகர ஜோதி, ஐயப்ப பக்தர்கள் , ஐயப்ப சுவாமி 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2R5ASHJ
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment