சுகாதாரம் இல்லாமல் இருக்கும் ரயில் மற்றும் ரயில் நிலையங்கள் குறித்து புகார் அளிக்க தனி தொலை பேசி எண்களை அறிமுகப்படுத்த வேண்டும் என தென்னக ரயில்வேக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரயில்களில் வழங்கப்படும் போர்வைகளை சுத்தப்படுத்தும் பணிக்கான ஒப்பந்தத்தை ஒதுக்க உத்தரவிடக்கோரி, தனியார் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், ஒப்பந்த விதிகளை முறையாக பின்பற்றாததால் தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை ஒதுக்க மறுத்து உத்தரவிட்டார்.
மேலும், ரயில் மற்றும் ரயில் நிலையங்கள் சுகாதாரம் இல்லாமல் இருப்பது குறித்து அதிருப்தி தெரிவித்த அவர், முறையாக பராமரிக்காத அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க ரயில்வே பொதுமேலாளருக்கு உத்தரவிட்டார். மேலும், பயணிகள் புகார் அளிக்க தனி தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி ஆணையிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.
Classic Right sidebar ரயில், சுகாதாரம், புகார், train, Railway இந்தியா
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2OV7zq5
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment