கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் நிர்மலாதேவி மற்றும் உதவி பேராசிரியர் முருகன் ஆகியோரின், ஜாமின் வழக்கு தீர்ப்பினை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்துள்ளது.
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிர்மலாதேவி, முருகன் ஆகியோர், ஜாமின் வழங்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள், நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரத்தின் பின்புலத்தில் உள்ள முக்கிய அதிகாரிகளை தப்பிக்கவைக்கும் எண்ணத்தில் போலீசார் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். மேலும், நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகிய மூவரின் மீது மட்டும்தான் குற்றச்சாட்டுகளை போலீசார் கூறிவருவதாகவும், இதனால், இந்த வழக்கு தவறான பாதையில் செல்வதாகவும் வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அவர்களுக்கு ஜாமின் வழங்க கடும்எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், ஜாமின் வழக்கு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
Classic Right sidebar நிர்மலாதேவி, மதுரை உயர்நீதிமன்றம், NirmalaDevi தமிழகம்from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2N8JCcX
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment