வருகிற 29-ந்தேதியுடன் தென்மேற்கு பருவ மழை முடிவடையும் நிலையில் வடகிழக்கு பருவ மழை தொடங்குவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழையால் வட மாநிலங்களில் பலத்த மழை பெய்தது. பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டது.
கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வட இந்தியாவில் தென்மேற்கு பருவமழை அதிகரித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் இமாச்சல பிரதேசத்தில் 14 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தொடர் மழை பெய்கிறது. கடந்த 4 தினங்களில் அங்கு இயல்பை விட 33 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது. வருகிற 29-ந்தேதியுடன் தென்மேற்கு பருவ மழை முடிவடையும் அன்றில் இருந்து வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2OSP1Xg
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment