Friday, September 28, 2018

பட்டாக்கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட, கல்லூரி மாணவன் !

ஆவடி  அடுத்த அண்ணனுார் ரயில் நிலையம்  அருகே  பட்டாக்கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட, கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்துள்ள, சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம்  ஆவடி அருகே உள்ள அண்ணனுார், அந்தோணி நகரைச் சேர்ந்தவர், ரஞ்சித், நெமிலிச்சேரியில் உள்ள, தனியார் கல்லுாரியில், பி.ஏ., ஆங்கில இலக்கியம் இறுதியாண்டு படித்து வருகிறார். 

இந்த நிலையில், மாணவன் ரஞ்சித்தும், அவருடைய நண்பர் விஷால் என்பவரும், அண்ணனுார் ரயில் நிலையம் பணிமனை அருகே, ஆளுக்கொரு பட்டா கத்தியுடன் ரகளையில் ஈடுபட்டனர். 

அவர்கள், மது போதையிலும் இருந்ததால், பொதுமக்கள் பீதி அடைந்தனர். தகவலறிந்து வந்த திருமுல்லைவாயில் போலீசார், ரஞ்சித்தை விரட்டி பிடித்தனர். 

இதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த பிப்ரவரி மாதம் தேர்வு எழுத சென்ற போது, சிலர் ஆயுதங்களால் தாக்கியதால், அன்றிலிருந்து ரஞ்சித்  கத்தியுடன் உலா வருவது தெரிய வந்தது. 

சில தினங்களுக்கு முன், ரூட் தல யார் என்ற பிரச்சனையில், ஆவடி பேருந்து நிலையம் அருகே மாநில கல்லூரி மாணவரை ஓட ஓட விரட்டி பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், வெட்டிய சம்பவம் அடங்குவதற்குள், தற்போது கல்லூரி மாணவன் கத்தியுடன் பிடிப்பட்ட  சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

புத்தகங்களை தூக்க வேண்டிய கைகளில், ஆயுதங்களை ஏந்துவதை, ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.

Classic Right sidebar தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2xMImrk
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment