Friday, September 28, 2018

4 மாதங்களாக கால் டாக்சியில் இலவசமாக பயணம்... சென்னை இளைஞர் நூதன மோசடி...

சென்னையில் 4 மாதங்களாக கால் டாக்சியில் இலவசமாக பயணம் செய்து மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்

சென்னையை சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனம் தங்களது நிறுவனத்தின் புதிய வீடுகளை வாடிக்கையாளர்களுக்கு காட்டுவதற்காக ஃபாஸ்ட் ட்ராக் கால் டாக்ஸி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள், கால் டாக்சிக்கு அழைத்து, நிறுவனத்தின் குறிப்பிட்ட குறியீட்டை கூறினால் அவர்கள் இலவசமாக பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இதனைப் பயன்படுத்தி ராயபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் கடந்த 4  மாதங்களாக சென்னை முழுவதும் இலவசமாக பயணம் செய்துள்ளார்.

மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடைக்கானல் சென்று வந்துள்ளார். இந்நிலையில் சந்தேகம் அடைந்த கால் டாக்ஸி நிறுவனம், ஸ்ரீதரை வடபழனி காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் அவர் மோசடி செய்தது தெரிய வந்தது. உடனே ஸ்ரீதர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Classic Right sidebar சென்னை, நூதன மோசடி, கால் டாக்ஸி, Chennai, Call Taxi தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2NO5Lmm
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment