Wednesday, September 26, 2018

டெல்லியில் மூன்றடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து

டெல்லியில் அசோக் விஹார் பகுதியில் 3 மாடி அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் அசோக் விஹார் பகுதியில் உள்ள  சவான் பார்கில் 3 மாடி கட்டிடம் இன்று காலை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளனது. இந்த சம்பவம் குறித்து அக்கப்பக்கத்தினர் மீட்புக்குழுவினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப்படையினர்,  மீட்புப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த கட்டிட விபத்தில் 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர், காயத்துடன் மீட்கப்பட்ட 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 50க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது.

Classic Right sidebar டெல்லி, Delhi, Building Collapse, மாடி கட்டடம், அசோக் விஹார் பகுதி இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2OaGdiA
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment