Friday, September 28, 2018

ஆசிய கோப்பையை மீண்டும் கைப்பற்றியது இந்திய அணி

வங்க தேசம் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில்  இந்தியா  3 விக்கெட் வித்தியாசத்தில் பரபரப்பான வெற்றிபெற்று ஆசியக் கோப்பையை  மீண்டும் கைப்பற்றியது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் நடைபெற்றது.  இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார்.
வங்க தேச அணியின் லிட்டன் தாஸ் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இறுதியில் வங்கதேசம் அணி 48 புள்ளி 3 ஓவரில் 223 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 223 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.இந்திய அணியின் சார்பில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஷிகார் தவான் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 48 ரன்களில்  வெளியேறினார். பின்னர்  கேதர் ஜாதவ் , குல்தீப் யாதவ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் ஒரு பந்துக்கு ஒரு ரன் என்ற பரபரப்பான நிலை ஏற்பட்டது. 50 ஒவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்களை சேர்த்து இந்தியா வெற்றி பெற்றது. இதன்மூலம் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றது. ஆசிய கோப்பையை இந்தியா 7 ஆவது முறையாக கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Classic Right sidebar விளையாட்டு 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2OiGyjg
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment