7 உலக அதிசயத்தில் முக்கியமானதாக திகழ்வது எகிப்து பிரம்மீடு... இந்த எழில்மிகு கட்டிட கலையின் பிரம்மாண்ட சுவாரஸ்யங்களும், ரகசியங்களும் மெய்சிலிர்ப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளன.
எகிப்தில் 4,500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது கீஸா பிரம்மீடு. மனிதனால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய கட்டிட அமைப்பாக இது திகழ்கிறது. இந்த பிரம்மாண்ட பிரம்மீடு எதற்காக கட்டப்பட்டது என்ற கேள்விக்கு மட்டும் இன்னும் விடை கிடைத்தபாடில்லை.
பிரம்மீடில் உள்ள ஒவ்வொரு கல்லும் 5முதல்10 டன்கள் வரை எடை கொண்டவைகள். இந்தளவு கணமான கல்லை இயந்திரங்களின் உதவியில்லாமல் நகர்த்துவது சாத்தியமில்லாத ஒன்று. அப்படி இருக்கும் போது, பல்லாயிரக்கணக்கான கற்களைக் கொண்டு இந்த பிரம்மீடு எவ்வாறு கட்டப்பட்டது என்பது இன்று வரை அவிழாத மர்ம முடிச்சாகவே உள்ளது.
பிரம்மீட்டின் பாறைகளில் செதுக்கப்பட்டிருக்கும் சித்திர எழுத்துக்கள் அதிசயத்தின் அடுத்த பரிமாணமாக காணப்படுகிறது. மனிதனால் பயன்படுத்தப்படும் உளியைக் கொண்டு இந்தளவு நுணுக்கமான சித்திர எழுத்துக்களை உருவாக்கியிருக்க முடியாது என்பதால், அந்த காலத்திலேயே ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டனவா என்ற சந்தேகமும் வலுவாக நிலவுகிறது.
பிரம்மீடுகளுக்கு அடியில் ரகசிய சுரங்கங்கள் மற்றும் அறைகள் காணப்படுகின்றன. இவைகள் உணவுப்பொருட்களை பதுக்கி வைக்கவும், அவசர காலங்களின் போது ஒளிந்துகொள்ளவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
இந்த அழகிய அதிசயத்தின் இன்னொரு சிறப்பு என்னவென்றால், எந்தவொரு பருவ கால சூழ்நிலையிலும் வெப்பநிலையை சீராக வைத்துக்கொள்ளும் திறன் இதற்கு இருந்தது தான். பிரம்மீட்டிற்குள் நிலவும் வெப்ப நிலை 20 டிகிரி செல்ஸியஸ் அளவிற்கு குறையாமலும், அதிகரிக்காமலும் உள்ளது. இதனால், பண்டைய கால ஏசி இயந்திரமாகவும் பிரம்மீடு பார்க்கப்படுகிறது.
கீஸா பிரம்மீட்டில் மொத்தம் 3 நுழைவு வாயில்கள் உள்ளன. இந்த நுழைவு வாயில் பாறையின் எடை 20 டன்கள். ஆனால், இவ்வாயிலை உட்புறத்திலிருந்து வெறும் ஒரு கையால் திறந்து விடலாம் என்பது அக்கால பொறியியல் திறமைக்கு ஆகச்சிறந்த சான்று மட்டுமல்ல அதிசயமும் கூட.
பிரம்மீடை தங்க நிறத்தில் ஜொலிக்க வைப்பதற்காக அதனை சுற்றிலும் லைம்ஸ்டோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே, சூரிய ஒளி படும்போதெல்லாம் பிரம்மீடு தங்க நிறத்தில் மின்னுகிறது. பல மைல் தூரத்தில் நின்று பார்த்தாலும் இந்த ஜொலிப்பு ஜாலம் பார்க்க முடியும் என்பது மலைக்க வைக்கும் உண்மை.
ஒரியன் நட்சத்திரத்தை குறிக்கும் வகையில் 3 கீஸா பிரம்மீடுகளின் கட்டுமான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
பண்டைய நாகரீகத்திற்கு முந்தைய காலகட்டத்தில் பிரம்மீடுகளின் உச்சிப்பகுதி ஃபிளாட்டாக அதாவது ஒரே மட்டமாகவே கட்டப்பட்டிருந்தன. பின்னரே, கூர்மையான உச்சியைக் கொண்டதாக இவை மாற்றி வடிவமைக்கப்பட்டன.
பிரம்மீடின் மொத்த எடை 57,50,000 டன்கள் என்பது மலைக்க வைக்கும் உண்மை. உலகின் மிகப்பெரிய கட்டிடமான பூர்ஜ் கலிஃபாவின் எடை வெறும் 5,00,000 டன் மட்டுமே.
இங்குள்ள 3 பிரம்மீடுகளில் ஒன்றை மட்டும் கட்டி முடிப்பதற்கு ஆன காலம் 23 ஆண்டுகள். இதே பிரம்மீடை இப்போதுள்ள நவீன இயந்திரங்களைக் கொண்டு கட்டினால் 500 ஆண்டுகள் தேவைப்படும். அப்போது கூட, துல்லியமான பிரம்மீடு அமைப்பை கட்டியெழுப்பி இருக்க முடியாது.
பிரம்மீடு கட்டப்பட்டிருக்கும் இடம் புவியின் மையப்பகுதி என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?.. ஆம், longest line of longitude and longest line of latitude சந்திக்கும் புள்ளியில் இந்த பிரம்மாண்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
பிரம்மீட்டின் உட்புறத்தில் குறைந்தபட்சம் 30,000 பணியாளர்களும், வெளிப்புறத்தில் 60,000 பணியாளர்களும் என மொத்தம் 90,000 பேர் கட்டுமானப் பணியை மேற்கொண்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் இப்பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வின் போது பிரம்மீடை கட்டிய வேலையாட்களின் பதப்படுத்தப்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. உலர் மணல், மதுபானம், ரொட்டித் துண்டுகள் உள்ளிட்டவை இவ்வுடல்களுடன் சேர்த்து புதைத்து வைக்கப்பட்டிருந்தன. மரணத்திற்கு பின்னராக வாழ்க்கை பயணத்திற்காக இந்த பொருட்கள் உபயோகிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஒட்டுமொத்த பிரம்மீட்டிற்கும் பாதுகாவலராக ஸ்ஃபிங்ஸ் சிற்பக்கட்டிடம் விளங்குகிறது. இச்சிற்பத்தின் உடல் அமைப்பு சிங்கத்தைப் போன்றும், முக அமைப்பானது மனித உருவத்தையும் ஒத்துள்ளது. இந்த முகமானது எகிப்தை ஆட்சி செய்த மன்னரின் முகமாக இருந்திருக்கலாம் என நம்ப்பப்படுகிறது. சூரிய உதயத்தை பார்த்தவாறு கட்டப்பட்டிருக்கும் இதன் உயரம் 241 அடி..
பிரம்மீட்டைக் கண்டுபிடித்தவராக கருதப்படுபவர் ஈமோடெப். கட்டிடக்கலை வல்லுனரான இவர் சிறந்த மருத்துவர், விண்வெளி ஆய்வாளர், மூத்த போதகர் உள்ளிட்ட பன்முகத்தன்மை கொண்டவராக திகழ்ந்தார். மறைவிற்குப் பிறகு மருத்துவத்தின் கடவுளாக போற்றப்பட்டு வருகிறார்.
12ஆம் நூற்றாண்டில் குர்தீஷ் அரசர் அல் அஜீஸ் பிரம்மீடை தாக்கி அழிப்பதற்கு முயற்சித்தார். ஆனால், பல்லாயிரக்கணக்கான ஆயுதங்களைக் கொண்டு போராடியும் பிரம்மீட்டை சற்று சேதமாக்க முடிந்ததே தவிர அதனை முழுவதுமாக அழிக்க முடியவில்லை, அசைக்கவும் முடியவில்லை.
எகிப்தில் மட்டுமே பிரம்மீடு இருப்பதாக நாம் நினைப்பது தவறு. உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 5,000ற்கும் மேற்பட்ட பிரம்மீடுகள் உள்ளன. ஆனால், இவற்றில் வெகு சில பிரம்மீடுகளையே ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதில், எகிப்தில் மட்டும் 140 பிரம்மீடுகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2OjyoqH
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment