பத்து ரூபாய் காய்ன்களை வாங்க மறுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை விடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி கூறியும் அதனை வாங்க பலர் மறுப்பு தெரிவிக்கின்றனர். தமிழகத்தின் சென்னையை தவிர வேறு எங்கும் பத்து ரூபாய் காய்னை வாங்க வணிகர்களும், பொதுமக்களும் அச்சம் தெரவிக்கின்றனர்.
ஒரு வதந்தி இன்று அளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்றால் பத்து ரூபாய் நாணயம் குறித்த வதந்தி தான். 500 மற்றும் 1000 ஆயிரம் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு கூறிய சில மாதங்களில் சிலர் 10 ரூபாய் நாணயமும் செல்லாது என்று சில விஷமிகள் பீதியை கிளப்பி விட்டனர். அது வரை பத்து ரூபாய் நாணயத்தை பார்ப்பதே வியப்பாக இருந்தப் பட்சத்தில் பலர் அதனை பெருமளவு புழக்கத்திற்கு கொண்டு வந்தனர்.
அதற்குள் இந்த வதந்தி காட்டுதீ போல் எங்கும் பரவ தொடங்கியதை அடுத்து பத்து ரூபாய் காயினை யாரும் வாங்க பலர் மறுத்தனர். இதனையடுத்து ரிசர்வ் வங்கி பத்து ரூபாய் செல்லாது என்று வெளியான தகவல் போலி என்றும் அதனை வாங்க மறுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கை மூலமாக எச்சரித்தது. ஆனால் அந்த அறிக்கை இன்று அளவும் அறிவிப்பாகவே உள்ளது. பத்து ரூபாய் காய்னை வங்கிகளில் வாங்கினாலும், வணிகர்கள் அதனை வாங்க மறுப்பது தான் பெரும் சர்ச்சையாக உள்ளது.
Classic Right sidebar வணிகம்from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2NOCW9k
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment