Friday, September 28, 2018

சபரிமலை தீர்ப்பால் மீண்டும் ஒரு இயற்கை பேரிடர் நடைபெறுமா என கேரள மக்கள் அச்சம்...!

கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளா தற்போது தான் வரலாறு காணாத இயற்கை பேரிடரில் இருந்து மீண்டு வருகிறது. இதனிடையே சபரிமலை குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் மேலும் ஒரு இயற்கை பேரிடரை சந்திக்க நேரிடுமோ என்ற அச்சத்தில் சிலர் உள்ளனர். 

கேரளாவில் வரலாறு காணாத கனமழையினால் 13 மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கியது. கேரளாவின் மிகப்பெரிய அணையான இடுக்கி அணை உட்பட அனைத்து அணைகளும் நிரம்பி வழிந்தன. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பல லட்ச கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்தனர். 

கேரளாவை புரட்டிப் போட்ட இந்த  இயற்கை பேரிடருக்கு காரணம் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதே என சிலர் மக்களிடம் பீதியை கிளப்பி வந்தனர். இதுப்பற்றி பெரிய விவாதமே கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  மிக நீண்ட காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் பாரம்பரியான ஆன்மீக நம்பிக்கையில் நீதிமன்றம் தலையீட கூடாது என்றும், பல ஆண்டுக்கால சம்பிரதாயங்களை அவமதிக்க கூடாது என்றும் கூறி வருகின்றனர்.

இதனிடையே தற்போது சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது. இதற்கு பல கட்சி தலைவர்கள், பெண்கள் அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர். கோயில்களில் ஆண்-பெண் பாரபட்சம் பார்க்க கூடாது என்பதே ஒட்டுமொத்த குரலாக உள்ளது. இருப்பினும் ஒரு சிலர் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினால்  மீண்டும் கேரளாவில் மிகப் பெரிய இயற்கை பேரிடர் நிகழும் என்று தேவையற்ற பீதியை கிளப்பி வருகின்றனர்.

Classic Right sidebar சபரிமலை, கேரளா, ஐயப்பன் கோவில், SabariMala, Kerala, Kerala Floods, Ayyapan Temple மாநிலம் சபரிமலை, கேரளா, ஐயப்பன் கோவில், Sabarimala, Kerala, Kerala Floods, Ayyapan Temple 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2zDK5AB
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment