அனுமதி இல்லாமல் விடுப்பு எடுத்து போராடினால் ஒருநாள் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டும் என தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வரும் 4-ம் தேதி விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்பது தமிழக அரசின் பணியாளர் ஒழுங்கு விதிகளுக்கு எதிரானது என்றும், சரியான காரணமாக இருந்தால் மட்டுமே 4-ம் தேதி அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் முன்னறிவிப்பின்றி விடுப்பு எடுப்போரின் ஒருநாள் ஊதியம் உள்ளிட்ட பிற சலுகைகள் பிடித்தம் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்
Classic Right sidebar தமிழகம்from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2y1XWhU
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment