அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் ஓப்பனிங் பாடல் பற்றியும், இந்தப் படத்தின் 3-ஆம் கட்டப் படப்பிடிப்பில் அஜித்-நயன்தாரா பங்கேற்று டூயட் பாடும் காட்சிகள் பற்றியும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
கிராமத்துப் பின்னணியில் ‘வீரம்’, நகரத்துப் பின்னணியில் ‘வேதாளம்’, சர்வதேச கடத்தல் பின்னணியில் ‘விவேகம்’ போன்ற படங்களை உருவாக்கிய அஜித்தும், இயக்குநர் சிவாவும் நான்காவது முறையாக கூட்டணி அமைத்திருக்கும் ‘விஸ்வாசம்’ படத்தை ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.
இதில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் யோகி பாபு, தம்பி ராமைய்யா, ரோபோ ஷங்கர், விவேக், கோவை சரளா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைத்து வரும் இந்தப் படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். இதன் மாஸான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் ரசிகர் களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
விஸ்வாசம் படத்தில் அப்பா - மகன் என டபுள் ரோலில் நடித்து ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்கப்போகிறார் அஜித். இந்தப் படத்துக்காக ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு, முதல் மற்றும் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், விஸ்வாசம் படக்குழுவினர் மூன்றாவது கட்டப் படப்பிடிப்புக்கு ஆயத்தமாகியுள்ளனர்.
இதன் 3-ஆம் கட்டப் படப்பிடிப்பும் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியிலேயே நடைபெகிறது. தற்போது, இந்த ஷெட்டியூலில் அஜித்தும், நயன்தாராவும் டூயட் பாடும் பாடல் காட்சிகளை படமாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘விஸ்வாசம்’ படத்தில் படத்தில், பாடலாசிரியர் அருண் பாரதி ஒரு பாடல் எழுதி யிருக்கிறார். அந்தப் பாடலில், ‘எத்தன உயரம் இமயமல... அதில் இன்னொரு சிகரம் எங்க தல...’ என்ற வரி இடம் பெற்றுள்ளது. இதை, அருண் பாரதியே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். எனவே, இந்தப் பாடல் தான் படத்தின் ஓப்பனிங் பாடலாக இருக்குமென கூறப்படுகிறது.
அஜித் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக ‘விஸ்வாசம்’ படம் வர இருக்கிறது.
Classic Right sidebar அஜித், விஸ்வாசம், சினிமா, Ajtih, Viswasam, Tamil Cinema சினிமாfrom Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2N1Udqf
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment