தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சுமார் 22,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் அறிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 6-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு தலைநகர் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக 22,000 பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 3, 4 மற்றும் 5-ம் தேதிகளில் 12,000 பேருந்துகளும், பண்டிகை முடிந்த பின்னர் மீதம் உள்ள பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கோயம்பேடு, அடையாறு, தாம்பரம், அண்ணா நகர், ஊரப்பாக்கம் ஆகிய 5 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி சிறப்பு பேருந்துக்கான முன்பதிவு தொடங்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Classic Right sidebar தீபாவளி பண்டிகை, சிறப்பு பேருந்து, diwali, Special Bus தமிழகம்
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2NMzITM
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment