ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வருகிற அக்டோபர் 4 ஆம் தேதி இந்தியாவுக்கு அரசு முறை பயணமாக வர உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனின் ஒரு பகுதியான கிரிமியாவை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்கா , ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளது. இந்த பொருளாதார தடையினால் இந்தியா ரஷ்யா இடையேயான நட்புறவு பாதிக்கப்படாது என்றும் இருநாடுகளிடையேயான நட்புறவு தொடரும் எனவும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்நிலையில் அரசு முறைப்பயணமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர்புடின் அக்டோபர் 4-ம் தேதி இந்தியா வருகிறார். இரண்டு நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பணயம் செய்ய உள்ள புடின், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் , பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Classic Right sidebar உலகம்from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2IojfPD
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment